இலங்கை செய்திகள்

நாடாளுமன்றம் வெறும் பேச்சுக்களுக்கான இடமாகவே இருக்கிறது

22 Jun 2022

நெருக்கடி நிலைமைகளில் இருந்து நாட்டை எவ்வாறு மீட்பது என்ற திட்டத்தை அரசாங்கம் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, நெருக்கடி நிலைமைகள் இருந்து நாட்டை மீட்பதற்காக தீர்வுத் திட்டம் இல்லை என்றால் நாடாளுமன்றத்தை இழுத்து மூடி விட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தின் நேற்றைய (21) அமர்வில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், நாடாளுமன்றம் கூடி நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், நாடாளுமன்றம் வெறும் பேச்சுக்களுக்கான இடமாகவே இருக்கிறது.

ஒவ்வொரு அமர்வு கூடும்போதும் மக்கள் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள். ஒன்று நெருக்கடி நிலைமைகளை தீர்த்துவிட்டு நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும். அல்லது நெருக்கடி நிலைமைகள் தீரும் வரையில் நாடாளுமன்றத்தை மூட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

எரிவாயுவை கொள்வனவு செய்வதில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கொள்ளையடித்ததாக ஜனாதிபதி சட்டத்தரணி நாகானந்த கூறுகிறார். நாம் எந்தவிதமான டீல்களையும் செய்யவில்லை. இது தொடர்பில் அமைச்சரவையும், பிரதமரும் விளக்கமளிக்க வேண்டும். இதற்கு பதிலளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

நாட்டின் நெருக்கடி நிலைமைகளில் இருந்து நாட்டை எவ்வாறு மீட்பது என்கிற தீர்வு திட்டத்தை அரசாங்கம் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும், அவ்வாறு செய்யவில்லை என்றால் நாடாளுமன்றத்தை இழுத்து மூடிவிட்டு பேசாமல் இருக்க வேண்டும். முறையான சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும் எனவும் இதன்போது கூறினார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam