இலங்கை செய்திகள்

நாடாளுமன்றத்தில் மஹிந்தவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது - ரணில்

08 Nov 2018

எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் மஹிந்த ராஜபக்ஷவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இந்தியத் தொலைகாட்சி ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது அவர், வழங்கியுள்ள செவ்வியில்,  “நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் ஒருவருக்கே பிரதமர் பதவியை ஏற்க முடியும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

அதாவது 19 ஆவது திருத்தச்சட்டத்திற்கு அமைய பிரதமர் ஒருவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதாயின் அதனை நாடாளுமன்றத்தால் மாத்திரமே செய்ய முடியும்.

அதுவே 19 ஆவது திருத்தச்சட்டத்தில் குறிபிடப்பட்டுள்ளது. ஆகவே சபாநாயகரின் கருத்துக்கு அமைய எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் மஹிந்த ராஜபக்ஷவே தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஆனால் அவர்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பதே எனது திடமான நம்பிக்கை” எனத் தெரிவித்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்