சினிமா செய்திகள்

நாடக நடிகர்களுக்கு முதியோர் இல்லம்

09 Jun 2019

நாடக நடிகர்களுக்கு முதியோர் இல்லம் கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுக்கிறேன் என்று நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

வரும் 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் நடக்கிறது. இதில், பாண்டவர் அணியில் தலைவராக உள்ள நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

இதனை முன்னிட்டு மாவட்டந்தோறும் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் நாடக நடிகர்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இதன்படி சேலம் கல்லாங்குத்து பகுதியில் உள்ள சேலம் மாவட்ட நாடக நடிகர் சங்க கட்டிடத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவரும், நடிகருமான கருணாஸ் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்