இலங்கை செய்திகள்

நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்திலிருந்து விலக வேண்டும் - ஜீ.எல்.பீரிஸ்

12 Feb 2018

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த வெற்றியின் பின்னர் நாட்டை ஆளுவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என அந்த கட்சியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.தற்போதைய  நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்திலிருந்து விலக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை கருத்துக் கணிப்பகாகவே மக்கள் பார்க்கின்றனர் எனவும் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஏற்பதா நிராகரிப்பதா என்ற கேள்வியே மக்கள் மத்தியில் இருந்தது எனவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

இந்த சவால்களுக்கு மத்தியில் மக்கள் தகுந்த பதில் வழங்கியிருப்பதன் மூலம், தேர்தல் வரலாற்றில் இதுவரை நிகழாத மாற்றத்துடன் பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்