கனடா செய்திகள்

நயாகரா பிரதேசத்தில் 34 வாகனங்கள் தீக்கிரை

10 Jul 2018

நயாகரா பிரதேசத்தில் வாகனத் தரிப்பிடமாக உபயோகிக்கப்பட்ட பகுதி ஒன்றில் ஞாயிற்றுகிழமை ஆரம்பித்த புல் தீயானது வாகன தரிப்பிடமாக உபயோகிக்கப்பட்டு வந்த குறித்த பகுதியை தீக்கிரையாக்கியதில் 34-கார்கள் கருகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Niagara Stone வீதியில் வார இறுதியில் இடம்பெற்ற வருடாந்த தெரு விழாவில் இச்சம்பவம் நடந்துள்ளது.

சம்பவம் நடந்த பகுதி பார்வையாளர்களிற்கு இடமளிக்க உபயோகிக்கப்பட்டது. பிற்பகல் 3.40-மணியளவில் வாகனம் ஒன்றின் கீழ் இருந்து தீ ஆரம்பித்து 19-வாகனங்களை முற்றாகவும் மற்றும் 15-வாகனங்களை  பகுதியாகவும் எரித்துள்ளது.

தீயை அணைப்பதற்காக 11 டிரக் வண்டிகள் மற்றும் 40-தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.  இது வரையிலான கணிப்பீட்டின் பிரகாரம் 1.2 மில்லியன்கள் முதல் 1.5மில்லியன்கள் வரையிலான சேதம் ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்