சினிமா செய்திகள்

நயன்தாரா வழியை பின்பற்றும் சதா

16 Apr 2018

நடிகைகளுக்கு கதை பிடித்திருந்தால் அவர்களே அப்படத்தை தயாரிக்கவும் தயங்குவதில்லை. இதற்கு அண்மை உதாரணம் நயன்தாரா. 'அறம்' வெற்றிப் படத்தின் கதை பிடித்து அதை நயன்தாராவே தயாரித்தார். படமும் பேசப்பட்டது. பெரிய வெற்றியும் பெற்றது. அவரைப் போல நடிகை சதாவும் தன்னை நாயகியாக வைத்து 'டார்ச் லைட்' என்கிற படத்தை எடுத்து வருகிற இயக்குனர் மஜீத்தின் திறமையில் நம்பிக்கை வைத்து அவரது இயக்கத்தில் அடுத்த படத்தைத் தயாரிக்க முன்வந்துள்ளார்.

பெண்களுக்கான விழிப்புணர்வுப் படமாக 'டார்ச் லைட்' படம் உருவாகி வருகிறது. இப்படத்தை இயக்குபவர் விஜய்யை வைத்து 'தமிழன்' படத்தை இயக்கிய அப்துல் மஜீத். கான்பிடன்ட் பிலிம் கேஃப் நிறுவனம் ஆர்.கே ட்ரீம் வேர்ல்டு, ஒயிட் ஸ்க்ரீன் என்டர்டெய்ன்மென்ட் ஆகியவற்றுடன் இணைந்து தயாரிக்கிறது.

இப்படம் வறுமையால் பாலியல் தொழிலுக்கு வந்த பெண்கள் பற்றிப் பேசுகிறது. நெடுஞ்சாலைகளில் டார்ச் லைட்டுடன் நின்று கொண்டு லாரி ஓட்டுநர்களிடம் பாலியல் தொழில் செய்த பெண்கள் பற்றிய கதை இது.

படத்தின் கதையைக் கேட்ட நடிகைகள் பலரும் நடிக்கத் தயங்கியிருக்கிறார்கள். நடிகை சதா மட்டும் தைரியமாக நடிக்கச் சம்மதித்துள்ளார்.

இப்படம் சதா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருக்கும். நிச்சயம் அவருக்கு பெரிய பெயரைப் பெற்றுத் தரும். நிச்சயம் இப்படம் சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தும் என்று இயக்குனர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்