இலங்கை செய்திகள்

நன்கொடை டீசலுடன் சீனக் கப்பல் வருகின்றது

25 Nov 2022

சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 10.6 மில்லியன் லீற்றர் டீசலுடன் ‘சூப்பர் ஈஸ்டன்’ என்ற எண்ணெய் கப்பல் கொழும்பு துறைமுகத்தை நாளை (26) வந்தடையும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவில் இருந்து புறப்பட்ட ‘சூப்பர் ஈஸ்டன்’  கப்பல் தற்போது சிங்கப்பூர் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள நிலையில் நாளைய தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும்.

நாட்டில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் எரிபொருள் நெருக்கடியால் அதிக சிரமங்களை எதிர்கொண்டு வருகின்ற நிலையில் விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் இந்த எரிபொருள்  விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam