கனடா செய்திகள்

நன்கொடைப் பொருள் பெட்டிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த தீர்மானம்

15 May 2019

நன்கொடைப் பொருள் பெட்டிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கு ரொறன்ரோ நகரசபை  தீர்மானித்துள்ளது.

ரொறன்ரோவில் தற்போது வரை 200 இற்கும் மேற்பட்ட சட்டவிரோத நன்கொடைப் பொருள் பெட்டிகள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

இதில் கடந்த குளிர்கால பகுதியில் வீடற்ற பெண்ணொருவர் குறித்த பெட்டிக்குள் சிக்கி உயிரிழந்ததை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவை அடுத்து நாளை வியாழக்கிழமை உரிமம் வழங்குவது தொடர்பான குழு கூட்டம் இடம்பெறவுள்ளது. இந்த கூட்டத்தின்போது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களது பெட்டிகள் பாதுகாப்பாக இருப்பதை நிரூபிக்க சில ஆவணங்களை சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ப்ரூர் ஸ்ட்ரீட் மற்றும் டோவர் சௌர்ட் வீதி அருகே வீடற்றவர்கள் இருக்கும் பகுதியில் வைக்கப்பட்டுள்ள  நன்கொடைப் பொருள் பெட்டியில், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரை 8 பேர் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்