சினிமா செய்திகள்

நடிகைகளை பின்னுக்கு தள்ளும் ப்ரியா வாரியர்

11 Jul 2018

‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற `மாணிக்ய மலராய பூவே' பாடலில் இடம்பெற்ற கண்சிமிட்டும் காட்சி மூலம்

பிரபலமான ப்ரியா வாரியர் இந்திய அளவில் ரசிகர்கள் குவிந்தனர். மேலும் சமூக வலைதளங்களில் முன்னணி நாயகிகளையும் பின்னுக்கு தள்ளினார்.

தமிழ், தெலுங்கு, இந்தி என பட வாய்ப்புகள் குவிய, ஒரு அடார் லவ் படத்தின் ரிலீசுக்கு பிறகே அடுத்த படங்களை ஏற்கும் முடிவில் இருக்கிறார். இந்த படத்தை தமிழ், தெலுங்கில் வெளியிட அதிக தொகைக்கு வியாபாரம் ஆகி இருப்பதாக கூறுகின்றனர்.

இதுதவிர மாணிக்ய மலராய பாடல் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. மத உணர்வுகளை புண்படுத்துவதாக பிரியா வாரியர் மற்றும் படத்தின் இயக்குனருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு அவை தள்ளுபடி ஆனது. இந்த நிலையில் பிரியா வாரியருக்கு விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் வருகிறது. ஏற்கனவே ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார்.

இப்போது மற்றொரு பெரிய கம்பெனி ஒன்று அவரை அணுகி உள்ளது. இதில் நடிக்க அவருக்கு ரூ.1 கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மலையாள முன்னணி நடிகைகள் இன்னும் ரூ.1 கோடி சம்பளத்தையே எட்டாத நிலையில், விளம்பரம் ஒன்றில் நடிக்க ப்ரியா வாரியருக்கு ரூ.1 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக வெளியான தகவல் மலையாள நடிகைகளுக்கு சற்றே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம்.

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்