இலங்கை செய்திகள்

நஞ்சு கலந்த பால் பக்கெட் குற்றச்சாட்டு தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக முஜிபுர் ரஹ்மான் தெரிவிப்பு

11 Oct 2018

கூட்டு எதிர்க் கட்சி கடந்த செப்டம்பர் 05 ஆம் திகதி கொழும்பில் நடாத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு நஞ்சு கலந்த பால் பக்கெட்டுக்களை தான் விநியோகித்ததாக குற்றம் சாட்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, சேஹான் சேமசிங்க, சாஞ்சன விஜேசேகர ஆகியோருக்கு எதிராக 500 மில்லியன் ரூபா மான நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இதற்கான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சட்ட ஆலோசனை செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐ.தே.கவின் சிறிக்கொத்த காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்