கனடா செய்திகள்

நகைக் கடையில் நடைபெற்ற மோசடி

17 Sep 2023

கனடாவில் அண்மையில் நகைக்கடை வியாபாரி ஒருவர் சில வியாபாரிகளுக்கு பல அடுக்கு பவுண் முலாம் பூசப்பட்ட நகைகளை விநியோகம் செய்துள்ளார்.

இதன்படி, வியாபாரிகள் சிலர் அவரை நம்பி அதை வாங்கி உள்ளனர், இதேவேளை அந்த நகை வியாபாரியின் நம்பிக்கை இன்மையை அறிந்து சில வியாபாரிகள் பொருட்களை வெட்டி சோதித்துப் பார்த்துள்ளனர்.

குறித்த பொருட்கள் நுண்கருவியால் கூட காண்பிக்காதபடி பல அடுக்கு முலாம் பூசப்பட்டு இருந்துள்ளது.

இதனை அறிந்த பெண் வாடிக்கையாளர் ஒருவர் அவர் நகை வாங்கிய கடைக்கு சென்று நகைக்கடை வியாபாரியிடம் சண்டையிட்டுள்ளார். இச்சம்பவத்தினால் அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

இலங்கைத் தமிழர் ஒருவரின் நகைக் கடையிலேயே இந்த மோசடி சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam