இலங்கை செய்திகள்

தையிட்டி இராணுவ முகாமுக்குள் திருட முயன்ற இருவர் பிடிபட்டனர்

06 Dec 2018

இராணுவ முகாமுக்குள் அத்துமீறி  நுழைந்து திருட முற்பட்டார்கள் என குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை தையிட்டி பகுதியிலுள்ள இராணுவமுகாமுக்குள் புகுந்து இரும்புகள் உள்ளிட்ட பொருட்களை திருடினார்கள் என இருவரையும் நேற்று இராணுவத்தினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் காங்கேசன்துறை பொலிஸாரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்தனர். அவர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் இருவரையும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினார்கள்.

அதனை அடுத்து நடைபெற்ற விசாரணைகளின் பின்னர் இருவரையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்