இந்தியா செய்திகள்

தே.மு.தி.க. தொடக்க தினம் இன்று கொண்டாட்டம்

14 Sep 2018

செப்டம்பர் 14–ந் தேதி (இன்று) தே.மு.தி.க. ஆரம்பித்து 14–ம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது. தே.மு.தி.க.வுக்கு என்று தனி வரலாறு உண்டு. எந்த கட்சியிடம் இருந்தும் பிரிந்து வராமல் லஞ்சம், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக அனைத்து துறைகளிலும் முன்னேற்ற உறுதி கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கட்சி.

வெற்றி, தோல்வி வீரனுக்கு அழகு என்பதை கருத்தில் கொண்டு, எதற்கும் அஞ்சாமல் எதிர்காலத்தில் நம் இலக்கை நிச்சயம் அடைந்தே தீருவோம் என்று உறுதி ஏற்போம். உண்மையான கொள்கைக்காக, லட்சியத்திற்காக என்மேல் கொண்ட பற்றின் காரணமாக நம் இயக்கத்தில் உள்ள லட்சக்கணக்கான நல்ல உள்ளங்களுடன் என் பயணம் என்றும் தொடரும்.

நல்லவர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம் என்ற உறுதியோடும், ‘‘இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே’’ என்கிற நமது கொள்கைப்படி பொதுமக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை தே.மு.தி.க. துவக்க நாளில் வழங்கி வெகுசிறப்பாக கொண்டாட வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

 

 

 

 

 

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்