இலங்கை செய்திகள்

தேர்தலினை இலக்காக கொண்டு போலி பேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்குகள் ஆரம்பம்

12 Sep 2019

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலினை இலக்காக கொண்டு அதிகளவான போலி பேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் தலைவர் ரஜீவ் யசிரு இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக பல தரப்பினருக்கும் எதிராக அவதூறை ஏற்படுத்தும் மற்றும் குரோதத்தை தூண்டும் வகையிலான கருத்துக்கள் வெளியிடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின்போது பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைக் கண்காணிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இலங்கை தொலைத் தொடர்புகள் ஆணைக்குழுவிற்கு இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் தலைவர் ரஜீவ் யசிரு ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்