இலங்கை செய்திகள்

தேசிய அரசாங்க யோசனை தோற்கடிக்கப்படும் - தயாசிறி ஜயசேகர

12 Feb 2019

தேசிய அரசாங்க யோசனை தோற்கடிக்கப்படும் என்பதை ஐக்கிய தேசியக் கட்சி அறிந்துள்ளதால், அதனை  நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யாதிருப்பதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால் உறுதியாக அதனை தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியுள்ளார்.  மக்கள் சந்திப்பு ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இவ்வாறு தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி முற்படுவதற்கு காரணம் கட்சியினுள் காணப்படுகின்ற நெருக்கடியை இல்லாது செய்வதற்காகவே என்றும் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்தார்.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்