உலகம் செய்திகள்

தெற்கு சிரியாவில் போர் நிறுத்தம் துவங்கியது

10 Jul 2017

போர் நிறுத்தம் வந்துள்ளது பற்றி டிவீட் செய்துள்ள டிரம்ப் ரஷ்யாவுடன் இணைந்து உறுதியாக செயல்படும் நேரம் வந்துள்ளது என்று கூறியுள்ளார். ஆனாலும் போர் நிறுத்தப் பகுதிகளை யார் கண்காணிப்பது என்பது பற்றி இதுவரை முடிவாகவில்லை. கண்காணிப்பு மையத்தை ஜோர்டான் தலைநகரான அம்மானில் அமைக்கப்படுகிறது என்று ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் லாவ்ரோவ் கூறினார். போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தையும் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனது எதிர்ப்பாளர்களை சிரிய அதிபர் அஸாத் ரஷ்ய விமானங்கள் மூலமும், ஈரானிய போராளிகள் மூலமும் ஒரு வருடமாக பலவீனப்படுத்தி வருகிறார். கடந்த 2011 ஆம் ஆண்டில் அஸாத் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களோடு துவங்கியது இப்போர். இதுவரை மூன்று லட்சத்திற்கு அதிகமான பேர் போரினால் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. அத்துடன் உலகில் மிக அதிகமான அகதிகள் பிரச்சினையையும் உருவாக்கியது.

 

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV