இலங்கை செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் விபத்து

13 Jun 2018

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 121 வது மைல் கல் பகுதியில் கொடகம நோக்கி பயணித்த பஸ் ஒன்று கவிழ்ந்ததில் 5 பேர் காயங்களுக்குள்ளாகி மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இன்று அதிகாலை 5.30 மணியளவில் கொன்மாதுவ மற்றும் கொடகம பகுதிகளுக்கு இடைப்பட்ட 121 ஆவது மைல் கல் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கொடகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

குறித்த பேருந்து, பயணிகளுக்கான போக்குவரத்து பேருந்து இல்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். 

விபத்தில் எவருக்கும் பலத்த காயங்கள் ஏற்படவில்லை என்பதுடன் விபத்துக்கான காரணம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்