கனடா செய்திகள்

தென்மேற்கு எட்மன்டன் வங்கியில் குண்டு வெடிப்பு சம்பவம்

20 Sep 2018

தென்மேற்கு எட்மன்டன் வங்கியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இரு காவலர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று புதன்கிழமை  தென்மேற்கு 27 அவென்யூ மற்றும் 141 ஸ்ட்ரீட் பகுதியில் அதிகாலை 1.40 மணியளவில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு காவலர்களை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

மேலும் கொள்ளையடிக்கும் முயற்சியாக குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஆனால் எவ்வித பணமும் திருடப்படவில்லை என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தால் குற்றத்தடுப்பு பிரிவுக்கு தகவல் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்