இலங்கை செய்திகள்

தூய்மையான அரசியலை உருவாக்க தயாராக உள்ளோம்:கஜேந்திரகுமார்

11 Feb 2018

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ளூராட்சி மன்றங்களில் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களில் தூய்மையான அரசியலை உருவாக்க தயாராகவுள்ளவர்கள் தம்மோடு இணைந்து தமிழ்த் தேசிய பேரவையின் தரப்பாக செயற்படத் தயாராக இருந்தால் அவர்களை அரவனைக்க தயாராக இருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நேர்மையான ஊழலற்ற, ஆட்சியை நடாத்தி புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்போடு இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாகவும், ஆனால் அவ்வாறு இணைந்து செயற்பட வேண்டுமாயின் தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்துவிட்ட கூட்டமைப்பின் தலைமைகளும், அவர்களது தீர்மானங்கள் எல்லாவற்றிற்கும் ஆமோதித்து ஏற்றுக்கொண்ட கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் தலைமைகளும் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ அல்லது அதன் பங்காளி கட்சிகளுக்கோ எதிராக செயற்படுகின்றவர்கள் அல்ல நாங்கள் எனக் குறிப்பிட்ட அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு செய்கின்ற துரோகங்களை மக்கள் மத்தியில் வெளிப்படுத்துகின்றவர்களாகவே இருக்கின்றோம் என்பதையும் மிகத் தெளிவாக கூறி வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இன்று தமிழ் மக்கள் மிகப்பெரிய மாற்றத்திற்கு அடிதளம் ஒன்றை அமைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசிய பேரவையின் கொள்கையை, உண்மையில் அடிப்படை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையாக இருந்த கொள்கையை ஏற்றுக்கொண்டு நேர்மையான ஊழலற்ற, ஆட்சியை நடாத்தி புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கு தாம் ஒன்றாக தமிழ் தேசிய கூட்டமைப்போடு இணைந்து செயற்பட தயாராக உள்ளதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.தம்மோடு இணைந்து தமிழ்த் தேசிய பேரவையின் தரப்பாக செயற்படத் தயாராக இருந்தால் அவர்களை அரவனைக்க தயாராக இருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்