இலங்கை செய்திகள்

தூக்கில் தொங்கியநிலையில் இளைஞனின் உடல் மீட்பு!

13 Aug 2019

முல்லைத்தீவு விசுவமடு 12 ஆம் கட்டை பத்திரகாளி வீதியில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் உடல் இன்று(ஆகஸ்ட் 13) மீட்கப்பட்டுள்ளது.

25 வயதுடைடைய குணசிங்கம் பிரதீபன் என்ற இளைஞனே அவரது வீட்டு காணியில் உள்ள மரம் ஒன்றில் கயிற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதை தொடர்ந்து
உறவினர்கள் புதுக்குடியிருப்பு பொலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலீசார் உடலை மீட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளார்கள் பிரேத பரிசோதனையின் பின்னர் இறந்தவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்