உலகம் செய்திகள்

துஷ்பிரயோகத்தை சமாளிக்க உதவும் பாலியல் கையேடு!

17 Jul 2017

இஸ்லாமிய  பெண்களுக்கு உறவுகளை மேம்படுத்த உதவும்  ஒரு பாலியல் கையேட்டை ஒரு இஸ்லாமிய பெண் எழுதுகிறார்.  இது பாரம்பரிய இஸ்லாமிய வட்டாரங்களில் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் பிறந்த  உம் முலாத்  என்ற பெண் எழுத்தாளர் இந்த வழிகாட்டி புத்தகத்தை எழுதி உள்ளார்.

இது குறித்து எழுத்தாளர் உம் முலாத் கூறியதாவது:-

 "உங்களுடைய மனைவியுடன் செக்ஸ் வைத்துக்கொள்வதை நான் வலியுறுத்துகிறேன்.  ஆனால் அந்தத் துணையுடன் முழுமையான பாலியல் அனுபவங்களைக் கொண்டிருங்கள்.

"இஸ்லாமில்  திருமண பின்னணியில் உடல் உறவுகளை அனுபவிக்க முக்கியத்துவம் உள்ளது. வெறும் இனப்பெருக்கத்திற்காக அல்ல.

மனைவியின் உரிமையே அவள் கணவன் அவளை பாலியல் ரீதியாக திருப்திப்படுத்துவதுதான் என கூறினார்.

இந்த புத்தகம் நவீன தம்பதியினருக்காக வெளிப்படையாக விளக்குகின்ற அத்தியாயங்கள் மூலம் பாரம்பரியத்தை உடைக்கிறது.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV