இந்தியா செய்திகள்

துப்பாக்கி முனையில் சொகுசு கார் கடத்தல்

14 Aug 2019

தெற்கு டெல்லியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சொகுசு கார் ஒன்று வணிக வளாகம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த மற்றொரு கார், சொகுசு கார் மீது மோதியது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் காரை நிறுத்தி விட்டு இறங்கி வந்து பார்த்தார். உடனே சொகுசு கார் டிரைவருக்கும், மோதிய காரில் இருந்த இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் இருவரும் டிரைவரை துப்பாக்கியை காட்டி மிரட்டல் விடுத்து, சொகுசு காரை கடத்தி சென்று விட்டனர்.

இதுகுறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, காரை கடத்தியவர்களை தேடி வருகின்றனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்