கனடா செய்திகள்

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பெண் உட்பட இருவர் கைது

11 Jul 2018

ரொறன்ரோ Annex area பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பெண் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Madison வீதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ள இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்திருந்த நிலையில் அவர் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார் துப்பாக்கி ஒன்றுடன் ஒருவரை கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், அதே பகுதியில் வாகனம் ஒன்றில் சென்ற ஒருவர் பாதசாரி ஒருவரை மோதிவிட்டு சென்றுள்ளார். இதன்போது காயமடைந்த பாதசாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் இடம்பெற்ற இரண்டு சம்பவத்திற்கும் தொடர்பு இருப்பதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்