இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூடு நடந்தமைக்கு நாட்டின் முறைமையே காரணம்

19 Sep 2023

நாட்டில் தற்போதுள்ள முறைமை காரணமாகத்தான் தன்னை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக  நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

தனது கார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (19) கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“இந்த துப்பாக்கிச் சூட்டை யார் செய்தார்கள் என்பதை விட, தற்போதுள்ள முறைமையினால்தான்  தாக்குதல் நடத்தப்பட்டது என்று நான் நினைக்கிறேன், இந்த முறைமை தவறு என்று நாம் அனைவரும் அறிவோம், நம் நாட்டு மக்களுக்கும் தெரியும். நமது நாட்டின் சமூக அமைப்பு தவறு. அரசியலும் தவறு.  அதனால்தான் நாடு இன்று இந்த நிலைக்கு வந்துள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam