இலங்கை செய்திகள்

துப்பாக்கிகள் மற்றும் ஹெரோயினுடன் இருவர் கைது

12 Jul 2018

துப்பாக்கிகள் மற்றும் ஹெரோயினுடன் இருவர் எல்பிட்டிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அம்பலாங்கொட அக்குரல மற்றும் தியசென்புர பகுதிகளை சேர்ந்த 24 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

குறித்த சந்தேக நபர்களில் ஒருவரிடம் இருந்து உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும், தோட்டக்கள் 5 உம் மற்றும் ஹெரோயின் 2 கிராம் 815 மில்லிகிராமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

அத்துடன், இரண்டாவது சந்தேக நபரிடமும்  துப்பாக்கி ஒன்றும் தோட்டக்கள் 3 உம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  சந்தேக நபர்களை பலபிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்