15 Mar 2023
மிஸ்ஸிசாகாவில் இடம் பெற்ற தீ விபத்து சம்பவத்தில் பத்து வயது சிறுவன் உயிரிழந்தான்.
கிரெடிட் பூர்வ குடியின மக்கள் வாழும் பகுதியில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தீ விபத்தில் சிக்கிய ஆறு பேரை தீயணைப்புப் படையினர் மீட்டுள்ளனர்.
இரண்டு வயது வந்தவர்களும், நான்கு சிறுவர் சிறுமியரும் தீ விபத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.