இலங்கை செய்திகள்

தீர்க்கப்படாத தமிழர் பிரச்சினையும் இன்றைய நிலைக்கு காரணம்

24 Jun 2022

ஊழல், தவறான நிர்வாகம், அனாவசியமான விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தமை போன்றன  இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக இருந்தாலும் கூட  தீர்க்கப்படாத தமிழ் மக்களின் அபிலாசைகள் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு தடையாக அமைந்துள்ளது என   தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் தீர்க்கப்படாத அரசியல் பிரச்சினையே 30 வருட கால யுத்தத்திற்கும் அதற்காக செலவிடப்பட்ட பாரிய நிதிக்கும் வழிவகுத்ததாக தெரிவித்துள்ள சம்பந்தன், யுத்தம் இடம்பெறாதிருந்தால் நாட்டின் பொருளாதாரம் இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்காது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தீர்வு காணப்படாத தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான கோரிக்கைக்கு தீர்வு காண்பதன் மூலம் சர்வதேச சமூகத்திற்கு இலங்கை புதிய முகத்தினை காட்ட முடியும் எனவும் , நாட்டின் அனைத்து மக்களும் தங்களின் இறைமையை பயன்படுத்தக்கூடிய வகையிலான ஒரு அரசியல் யாப்பின் மூலம் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் சேர்ந்து பணியாற்றி, நாட்டினை கட்டியெழுப்ப முடியும் என்பதையும் உலகிற்கு காண்பிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam