கனடா செய்திகள்

திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட இரண்டு ஆண்கள்

13 Sep 2023

கனடாவில் வித்தியாசமான முறையில் இரண்டு ஆண்கள் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளனர். பென் கென்ட் மற்றும் ஜோய் கிலிஷ் ஆகிய இருவரும் இவ்வாறு திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இருவரும் சுமார் ஒரு தசாப்த காலமாக ரிரிசீ போக்குவரத்து சேவையின் ஸ்ட்ரீட் காரில் பயணித்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த  போக்குவரத்தின் போது இருவரது இந்த நட்பு காதல் ஆக மலர்ந்து திருமண பந்தத்தில் நிறைவடைந்துள்ளது. தங்களது காதலை வளர்த்த ஸ்ட்ரீட் காரில் திருமண நிகழ்வினை நடத்த இருவரும் திட்டமிட்டனர்.

அதன்படி கைவிடப்பட்டிருந்த ஸ்ட்ரீட் கார் ஒன்றில் திருமண நிகழ்வினை நடத்தியுள்ளனர். ரொறன்ரோ  பெரும்பாக பகுதியில் போக்குவரத்து செய்யும் போது அடிக்கடி இவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒன்றாரியோவின் மில்டன் பகுதியில் அமைந்துள்ள அருங்காட்சியாகத்தின்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்ட்ரட் காரில் இவர்கள் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam