இலங்கை செய்திகள்

திருமண பந்தத்தில் இணைந்தார் நாமல் ராஜபக்ஷ

12 Sep 2019

எதிர்க்கட்சித் தலைவரும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரான, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, திருமண பந்தத்தில் இன்று இணைந்துகொண்டார்.

இன்றுக் காலை, கொழும்பு, கங்காராமை விஹாரையில் இடம்பெற்ற விசேட வழிபாடுகளின் பின்னர், தங்கல்லையிலுள்ள கார்ல்டனின் திருமண வைபவம் இடம்பெறுகின்றது.

நாமலும், அவருடைய காதலியான லிமினி வீரசிங்ஹவும், இரு வீட்டாரின் அனுமதியுடன் திருமண பந்தத்தில் இன்று இணைந்துகொள்கின்றனர்.

இதேவேளை, எதிர்வரும் 16ஆம் திகதி கொழும்பு ஷங்கரில்லா ஹோட்டலில் விசேட விருந்துபசார வைபவம் இடம்பெறவுள்ளது.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்