சினிமா செய்திகள்

திருமணம் பற்றி நடிகை வரலட்சுமி திடீர் அறிவிப்பு!

14 Aug 2019

நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி, ஹீரோயின் மற்றும் வில்லி வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வரும் வரலட்சுமி சரத்குமார், நடிகை விஷாலை காதலிப்பதாக அவ்வபோது செய்திகள் வெளியானது.

 

ஆனால், விஷாலுக்கோ ஆந்திராவை சேர்ந்த பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்ததால், வரலட்சுமி குறித்த காதல் செய்திகள் வதந்தியானது. இதையடுத்து வரலட்சுமி நடிப்பில் தீவிரம் காட்டி வந்தார்.

 

இந்த நிலையில், இன்று திடீர்ன்று திருமணம் பற்றி பரபரப்பு அறிவிப்பு ஒன்று வெளியிட்ட வரலட்சுமி, அதன் மூலம் ரசிகர்களுக்கு மட்டும் இன்றி அவரது தந்தையான சரத்குமாரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறார்.

 

இன்று சென்னையில் நடைபெற்ற ‘கன்னிராசி’ பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய வரலட்சுமி, “இந்த படம் காதல் திருமணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையில் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்” என்று கூறினார்.

 

வரலட்சுமியின் இந்த திடீர் அறிவிப்பு அவரது தந்தை நடிகர் சரத்குமாரை நிச்சயம் அதிர்ச்சியடைய செய்திருக்கும் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்