இலங்கை செய்திகள்

திருந்தாத குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதில் தவறில்லை - மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

12 Jul 2018

சிறையில் போடப்பட்டதன் பின்னரும் குற்றவாளிகள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாயின் அவர்களை தூக்கு மேடைக்கு  கொண்டுசெல்வதில் தவறில்லை என காதினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

உயிர் ஒன்றை எமக்குக் கொடுக்கவும் முடியாது, எடுக்கவும் முடியாது. குற்றம் செய்துவிட்டு சிறைப்படுத்தப்பட்ட பின்னர் அங்கும் தவறு செய்யும் சிலர் உள்ளனர். போதைப் பொருள் வியாபாரம் நடைபெறுகின்றது. நல்ல சமூகம் ஒன்றை உருவாக்க முடியாதுள்ளது.

அதேபோன்று, சிறைப்படுத்தப்பட்ட பின்னர் தனது மனதை சரிசெய்து கொண்டவர்களும் உள்ளனர். அவர்கள் தொடர்பில் நியாயமான முடிவை எடுப்பது தவறல்ல.

குற்றவாளி சிறையில் இருந்தும் திருந்த சந்தர்ப்பத்தை அமைத்துக் கொள்ளாமல், அங்கும் குற்றம் செய்வதாயின் அவரைத் தூக்கில் தொங்க விடுவதில் தவறில்லை என காதினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் கூறியுள்ளார். 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்