கனடா செய்திகள்

திருக்குறளை முன்னிறுத்தி பதவியேற்றார் விஜய் தணிகாசலம்

12 Jul 2018

கனடாவின் ஒன்ராறியோ பாராளுமன்றம் உத்தியோகபூர்வமாக யூலை 11ஆம் திகதி ஆரம்பித்துள்ள நிலையில் அதற்கு யூன் 7ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஸ்காபுரோ ரூச்பார்க் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட தமிழ் இளையவர் விஜய் தணிகாசலம் யூலை 10ஆம் திகதி குயின்ஸ் பார்க்கில் உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக் கொண்டார்.

 

தாங்கள் விரும்பிய புனித நூலை முதன்மைப்படுத்தி பதவிப்பிரமாணம் செய்து கொள்ளும் வாய்பபைப் பயன்படுத்தி தமிழ் மறையாம் திருக்குறளை முதன்மைப்படுத்தி அவர் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

பெரும் சவால் நிறைந்த மேற்கத்திய அரசியல் அரங்கில் தனது உரிமைகளை சரிவரப்பயன்படுத்தி அவர் தனது பதவிப்பிரமாணத்தை அவர் மேற்கொண்டதையிட்டு பலரும் மகிழ்ச்சியும் பாராட்டுதல்களையும் தெரிவித்துள்ளனர்.  






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV