இலங்கை செய்திகள்

திருகோணமலை போராட்டம் 156 நாட்களை நிறைவு செய்து : சிறப்பு கவனயீர்ப்பு போராட்டம்

05 Aug 2017

இறுதிக்கட்ட போரின் போது சிங்கள இராணுவத்திடம் சரணடைந்த, ஒப்படைக்கப்பட்ட மற்றும் கைதுசெய்யப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்டுள்ள உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் தீர்வுகளின்றி தொடர்கின்றது

திருகோணமலை போராட்டம் 156 நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில் இன்று சிறப்பு கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது. இன்றைய போராட்டத்தின் ஒரு அங்கமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்கள் கோரிக்கை அடங்கிய மனு ஒன்றையும் அவர்கள் கிழக்கு மாகாண ஆளுனரிடம் கையளித்துள்ளனர். இதேவேளை மக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் முகமாக மக்கள் கூடியிருந்த பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்