இலங்கை செய்திகள்

திருகோணமலையில் வாள் வெட்டுக்குள்ளான இளைஞன் உயிரிழப்பு

16 Apr 2019

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, வாள்வெட்டுக் காயங்களுக்கு உள்ளான  இளைஞன் ஒருவர், இன்று  காலை உயிரிழந்துள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை - நீதிமன்ற வீதி, வில்லூன்றிப் பகுதியைச் சேர்ந்த தங்கத்துரை தனுஸ்டன் (21 வயது) என்வரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காதல் விவகாரத்தில் ஏற்பட்ட வாக்குவாதமே இதற்கு காரணமெனப் பொலிஸ் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இளைஞனை வாளால் வெட்டிய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளாரெனவும் தெரிவித்த துறைமுகப் பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்