இலங்கை செய்திகள்

திருகோணமலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவாகக் குளக்கோட்ட மன்னன் உருவச் சிலை திறப்பு

07 Dec 2017

திருகோணமலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவாகக் குளக்கோட்ட மன்னனின் உருவச் சிலையொன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தம்பலகாமம் கோட்டக்கல்வி பிரிவில் உள்ள தி/குளகோட்டன் பாடசாலையின் முன்னால் இச்சிலை நேற்று திறந்துவைக்கப்பட்டது.

இதற்கான நிதி பொதுமக்கள், ICRC மற்றும் தம்பலகாமம் பிரதேச இளைஞர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர் என் விஜேந்திரன், கோட்டக்கல்வி அதிகாரி செல்வநாதன், பாடசாலையின் அதிபர் ஜ. இளங்கேஸ்வரன் ஆகியோர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்துத் திறந்து வைத்தனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்