இலங்கை செய்திகள்

திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் மாணவன் ஒருவர் உயிரிழப்பு

14 Aug 2019

திருகோணமலை, மட்டக்களப்பு வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்தமை காரணமாகவே நேற்று செவ்வாய்கிழமை காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை, தோப்பூர் – ஜின்னா நகரை சேர்ந்த 18 வயதான மாணவன் ஒருவனே இதன்போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது காயமடைந்த 19 வயதான மாணவன் சிகிச்சைகளுக்காக மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்