இந்தியா செய்திகள்

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாய, கல்விக் கடன் ரத்து!

16 May 2019

வரும் 23ம் தேதி மோடி பிரதமர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, அனுப்பானடி பகுதியில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி அதிகமாக பொய் பேசி வருவதாக குற்றம்சாட்டினார்.

 

1987ஆம் ஆண்டு பேரணியின்போது அத்வானியை டிஜிட்டல் கேமராவில் போட்டோ எடுத்து ஈ மெயிலில் அவருக்கு அனுப்பி வைத்ததாக மோடி பேசியதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், அந்த காலகட்டத்தில் டிஜிட்டல் கேமராவுமில்லை ஈமெயிலும் இல்லை என்றார்.

 

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாய கடன், கல்விக் கடனை முழுவதுமாக ரத்து செய்யப்படும் என்றும் ஸ்டாலின் உறுதி அளித்தார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்