இலங்கை செய்திகள்

தினமும் இரண்டரை மணி நேரம் மின்வெட்டு

23 Jun 2022

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம் முழுமையாக இயங்கும் வரை தினமும் இரண்டரை மணி நேரம் மின்வெட்டை தொடர்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை தேசிய கட்டமைப்புடன் இணைக்கும் வரை மின்வெட்டு நேரம் குறைக்கப்படாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கனரக எரிபொருள் எண்ணெய் மற்றும் உலை எண்ணெய் தொகுதிக்காக 34 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நேற்று (21) செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

குறித்த எண்ணெய்த் தொகுதி இன்றையதினம் தரையிறக்கப்படும் என்றும் அவை மின் உற்பத்தி மற்றும் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின் பிறப்பாக்கியொன்று பராமரிப்பு பணிகளுக்காக கடந்த வாரம் தேசிய மின் கட்டமைப்பில் இருந்து துண்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam