இலங்கை செய்திகள்

திடீர் வேலை நிறுத்தம் தொழிற்சங்க பயங்கரவாதமே - பிரதமர் அலுவலகம்

10 Aug 2018

தொழிற்சங்கள் சில ஆரம்பித்துள்ள திடீர் வேலை நிறுத்தம் வரலாற்றில் கரும்புள்ளியாக அடையாளப்படுத்த முடியும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தின் பணியாளர் சபையின் முக்கியஸ்தரும் அமைச்சருமான சாகல ரத்நாயக்க வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கம் சில எடுத்து காட்டியுள்ள விடயம் எதுவுமல்ல தொழிற்சங்க பயங்கரவாதம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பணியை நிறைவு செய்து வீடுகளுக்கு செல்லும் ஆயிரம் பயணிகளும் பரிட்சையில் தோற்றும் பரீட்சாத்திகளும் இந்த திடீர் வேலை நிறுத்தத்தினால் சங்கடங்களுக்கு உள்ளாகியிருந்தனர். நேற்றைய தினம் தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட இந்த நடவடிக்கை உண்மையான தொழிற்சங்க நடவடிக்கை அல்ல தொழிற்சங்க பயங்கரவாதமே ஆகும். 

அதாவது தொழிற்சங்கங்களின் குறுகிய நோக்கம் சமூகத்தின் அனைத்திலும் பார்க்க உயர்வாக கருதப்படும் தமது தேவையை தவிர்ந்த ஏனைய சிலரின் தேவைகள் விருப்புக்கள் முக்கியமானதில்லை என்று நினைக்கும் குறுகிய மனப்பான்மையாகும். எமது நாடு என்ற ரீதியில் ஒன்றிணைந்து 30 வருடகாலமாக நாட்டை சீர்குலைவுக்கு உற்படுத்திய பிரிவினைவாத பயங்கரவாதத்தை தோற்கடித்த வகையில் இந்த தொழிற்சங்க பயங்கரவாதத்தை ஆரம்பத்திலே தோற்கடிப்பதற்கு காலம் ஏற்பட்டுள்ளது. 

பாரம்பரிய மற்றும் தர்ம கட்டமைப்புக்குள் தமது நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும். நீண்ட பணிகளுக்கு பின்னர் வீடுகளுக்கு செல்லும் பயணிகள் மற்றும் தமது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான காலகட்டத்தில் பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களின் தலையில் துப்பாக்கியை வைத்து தமது கோரிக்கையை நிறைவேற்றுமாறு கோருவது எந்த வகையில் சம்பிரதாய மரபுகளுக்கு உட்பட்டதல்ல. வேலைநிறுத்தம் தொழிற்சங்கங்களின் இறுதி தந்திரோபாயமாக அமைய வேண்டும். அத்தோடு எந்த வகையிலும் தாம் கொண்டுள்ள முதலாவது ஆயுதமாக பயன்படுத்த கூடாது. 

ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக எமது அரசாங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை  கருத கூடாது. அத்தோடு இந்த தொழிற்சங்க பயங்கரவாதத்தை தோற்கடித்து மக்கள் வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கு நாம் ஆக கூடுதலான வகையில் அர்பணிப்போம் என வலியுறுத்துகிறோம். இதற்காக அரசாங்கத்திற்கு ஆக கூடிய ஒத்துழைப்பை வழங்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்