இலங்கை செய்திகள்

தாய் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை- வல்வெட்டித்துறையில் சம்பவம்

09 Oct 2019

யாழ். பொலிகண்டி தெற்கு வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவர் கண்டித்ததன் காரணமாக விபரீத முடிவை எடுத்த சிறுவனொருவர் இன்று அதிகாலை  பரிதாமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் பொலிகண்டி தெற்கு வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த அசோக் ரவி ரஹிம்சன் (வயது 12) என்ற சிறுவனே உ யிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

பூமாலை கட்டும் பொழுது சகோதரிக்கும், இளைய சகோரனான  குறித்த சிறுவனுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.இதனை அவதானித்த தாய், சகோதரிக்கு இடையூறு விளைவித்த சிறுவனை அடித்துள்ளார்.

இதனையடுத்து சிறுவனை நீண்ட நேரமாக காணாத நிலையில் உறவினர்கள் சென்று பார்த்த போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனடியாக வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு இன்று அதிகாலை மாற்றப்பட்டார். எனினும் சிறுவன் சிகிச்சை பலனின்றி அதிகாலை உ யிரி ழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

 






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்