உலகம் செய்திகள்

தாய்லாந்தில் கட்டிடம் இடிந்ததில் 3 தொழிலாளர்கள் பலி

12 Aug 2019

தாய்லாந்தின் தெற்கே புக்கெட் நகரில் 2 அடுக்குகள் கொண்ட கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது.  அந்த கட்டிடம் முழுவதும் கட்டி முடிக்கப்படும் முன்பே அலுவலகம் ஒன்று அதில் செயல்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று திடீரென அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது.  இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார், மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

தொடர்ந்து நடந்த மீட்பு பணியில் இடிபாடுகளில் இருந்து மேலும் இரண்டு உடல்கள் இன்று மீட்கப்பட்டன.  இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.  அவர்கள் அனைவரும் மியான்மர் நாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் என கண்டறியப்பட்டு உள்ளது.  இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்