உலகம் செய்திகள்

தாய்லாந்தின் அந்தக் குகைக்கு நிரந்தரமாக மூடுவிழா!

12 Jul 2018

தாய்லாந்து குகையில் சிக்கியிருந்த 12 சிறுவர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளர் உட்பட மொத்தம் 13 பேரும் நேற்று மீட்கப்பட்டு விட்ட நிலையில் அக்குகைக்கு தற்போது அதிகாரிகள் மூலம் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

 

உலகில் இருக்கும் சிக்கலான குகைகளில் ஒன்றாக தாய்லாந்தில் இருக்கும்
“தி தம் லு அங்” குகை தான். இக் குகை மோசமான வரலாற்றை சுமந்து இருக்கிறது.

 

ஆபத்து மற்றும் மிகவும் குறுகலான இக் குகைக்குள் தாய்லாந்தை சேர்ந்த பள்ளி கால்பந்து வீரர்கள் மாட்டினார்கள். விளையாட்டு சுற்றுலா சென்ற இவர்கள் கடந்த 17 நாட்களாக உள்ளேயே இருந்தனர். சென்ற வாரம் தான் அவர்கள் இருக்கும் இடம் கண்டுப்பிடிக்கப்பட்டது.

 

 தற்போது கடும் போராட்டத்திற்கு பின் மீட்பு பணி முழு வெற்றி பெற்றுள்ளது. ஒரு நாளுக்கு நான்கு பேர் என்று மூன்று நாட்களில் மீட்டு இருக்கிறார்கள். இதற்கான ஆயிரக்கணக்கான பணியாளர்கள் வேலை பார்த்தனர்.

 

அமெரிக்கா, தாய்வாந்து, சீனா இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த மீட்பு பணியாளர்கள் பணியாற்றினார்கள்.


இந்தப் பாதையில் வருவது மிகவும் கஷ்டமான ஒன்றாக இருப்பதாக பயிற்சி பெற்ற கடல் வல்லுனர்களே தெரிவித்து இருந்தனர்.

 

இடையில் பெரிய அளவில் மேடான இடம் இருப்பதால் அதை தாண்டுவது மிகவும் கடினமாக இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் தாய்லாந்து குகையில் சிக்கியவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு இருக்கிறார்கள்.

 

இந்நிலையில் இந்த குகைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இனி இந்த குகைக்குள் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் மிகவும் ஆபத்தான பகுதிகளில் இதுவும் ஒன்று என்ற பெயர் பெற்றுள்ளது. இனி இந்தப் பகுதியில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தற்போது மீட்கப் பட்ட மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்