இலங்கை செய்திகள்

தாயை தாக்கிய மகன் சகோதரனால் கொலை

14 Aug 2019

எல்பிட்டிய, மைத்திரிகம, கனேகொட பகுதியில் ஒருவர் கொலைச் செய்யப்பட்டுள்ளார்.  இந்த கொச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட முறுகல் நிலை முற்றியதை அடுத்து இளைய சகோதரர் மூத்த சகோதரனை கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கியுள்ளார்.  இந்த சம்பவத்தில் பண்டாரிகொடகே ஷாந்த புஷ்பகுமார என்ற 51 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர் குடி போதையில் தனது தாயை தாக்கும் போது அதனை இளைய சகோதரன் தடுக்கவே இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.  இளைய சகோதரன் தனது சகோதரனை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக, மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் எல்பிடிய பொலிஸார் தெரிவித்தனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்