இந்தியா செய்திகள்

தாஜ்மகாலை பாதுகாக்க முடியாவிட்டால் இடித்து விடுங்கள்

12 Jul 2018

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் யமுனை நதிக்கரையோரம் அமைந்துள்ளது. தாஜ்மகால் அமைந்துள்ள பகுதியில் அண்மைக்காலமாக ஏராளமான தொழிற்சாலைகள் கட்டப்பட்டு வருவதால் அதன் காரணமாக காற்று மாசு ஏற்பட்டு வெள்ளை பளிங்கு கற்களால் வடிவமைக்கப்பட்ட தாஜ்மகால் தற்போது செம்பழுப்பு நிறத்துக்கு மாறிவிட்டது.

இதையடுத்து தாஜ்மகாலை பாதுகாப்பதில் மத்திய அரசு அலட்சியம் காட்டுவதாக கூறி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரபிரதேச அரசு இது தொடர்பாக தொலைநோக்கு வரைவு திட்டம் ஒன்றை 4 வாரத்துக்குள் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது

நேற்றைய விசாரணையின்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.என்.எஸ்.நட்கர்னி கூறுகையில், கான்பூர் ஐ.ஐ.டி. தாஜ்மகால் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள காற்று மாசு குறித்து மதிப்பீடு செய்து வருகிறது. அது தனது அறிக்கையை 4 மாதங்களில் தாக்கல் செய்யும். இது தொடர்பாக சிறப்பு குழு ஒன்றும் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்

இதற்கு நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு கடும் கண்டனம் தெரிவித்து கூறியதாவது

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்