இலங்கை செய்திகள்

தலைமை ஏற்கத் தயார் என்கின்றார் சீ.வீ.கே

26 May 2023

அனைவரும் ஏகமனதாக தன்னை தெரிவு செய்தால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையினை ஏற்கத் தயாராக இருப்பதாக அந்த கட்சியின் மூத்த துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

சமகால நிலைமைகள் தொடர்பாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பதவிக்காக கட்சிக்குள் போகவில்லை எனவும், போட்டியில்லாமல் அனைவரினதும் ஒத்துழைப்போடும் இணக்கப்பாட்டோடும் தான் தெரிவு செய்யபட்டால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொள்ள தாயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam