கனடா செய்திகள்

தலைமறைவாகியுள்ள தாயைத் தேடும் பொலிஸார்

12 Mar 2018

வன்கூவரில் 9 வயது மகனை கடத்தி சென்றுள்ள தாயை கைது செய்ய பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

ஷவானா சௌத்ரி என்ற அந்த தாய், அவரது மகன் எமர்சன் கஸ்வேத் மற்றும் ஆறு வயது மகளுடன், ஒன்று அல்லது இரண்டு நாய்களுடன் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், பிள்ளைகளிற்கு தீங்கு விளைவிக்கவோ அல்லது ஆபத்து ஏற்படுவதற்கோ அவர் தன்பிள்ளைகளை கடத்தவில்லை என தெரிவித்துள்ள பொலிஸார், அவர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

தெற்காசிய நாட்டவரான 34 வயதான சௌத்ரி, 5.8 உயரம், 106 இறாத்தல்கள் எடையுடையவர் எனவும் நீண்ட கறுப்பு முடி மற்றும் கருமையான கண்கள் கொண்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் குறித்து தகவல் அறிந்தவர்கள் தம்மை உடனடியாக தொடர்புக் கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்