இலங்கை செய்திகள்

தலைக்கவசம் அணியாத 25 பேருக்கு இடத்தண்டம் அறவீடு

12 Feb 2019

தலைக் கவசம் அணியாமல் பாடசாலை மாணவா்களை மோட்டாா் சைக்கிளில் கொண்டு சென்றவா்களுக்கு எதிராக 1100 ரூபாய் சம்பவ இடத்தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி முன்னணிப் பாடசாலைகளின் முன்னால் நிற்கும் சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கண்காணிப்பில் போக்குவரத்துப் பொலிஸார், தலைக்கவசமின்றி மாணவர்களை உந்துருளியில் ஏற்றி வந்த 25க்கு மேற்பட்டவர்களுக்கு சம்பவ இடத் தண்டம் அறவிடப்பட்டது.

பாடசாலை மாணவர்களுக்கு தலைக்கவசம் தேவையில்லை என்பதால் வழமை போல் மாணவர்களுக்கு தலைக்கவசம் அணியாமல் பாடசாலைக்கு அழைத்து வந்தபோது பொலிஸாரால் இவர்கள் பிடிக்கப்பட்டனர். 

சாவகச்சேரி நகரில் உள்ள முன்னணிப் பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றிவரும் போது தலைக்கவசம் அணிவதில்லையென முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதையடுத்து, இந்தத் திடீர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்