இலங்கை செய்திகள்

தம்பியை குத்திக் கொலை செய்த அண்ணன்

13 Oct 2021

குடும்பத் தகராறு காரணமாக தனது உடன்பிறந்த தம்பியை, மூத்த சகோதரர்  கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் மாத்தளை- களுதாவளை பிரதேசத்தில் நேற்று (12) இரவு இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் களுதாவளை- திக்கிரியவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான ஸ்டீவன் ராஜ் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இக்கொலையுடன் தொடர்புடைய மூத்த சகோதரன் மாத்தளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்ட இளைஞனுக்கு இம்மாதம் 21ஆம் திகதி திருமணம் நடைபெறவிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாத்தளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam