இலங்கை செய்திகள்

தமிழ் பேசும் மக்களின் தீர்ப்பை மதிக்கின்றோம் - நாமல்

11 Feb 2018

தமிழ் பேசும் மக்களின் தீர்ப்பை மதித்து ஏற்றுக்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல்  ராஜபக்ஷ  தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில்  “தமிழ் பேசும் மக்களின் தீர்ப்பை மதித்து ஏற்றுக்கொள்கின்றோம். அவர்களோடு மேலும் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதற்கான வழிகளை நாம் நுட்பமாக ஆராய்கின்றோம். இந்த நாட்டின் அத்தனை குடிமக்களுக்காகவும் பேதமின்றி ஓய்வின்றிச் சேவையாற்றக் காத்திருக்கிறோம்”.என மேலும் குறிப்பட்டுள்ளார்.

வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் பிரகாரம் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவுக்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொரும்பாலன இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்