இலங்கை செய்திகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடனேயே நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டது

11 Jul 2019

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடனேயே ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 27 மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியினரினால் அரசாங்கத்துக்கு எதிராக 13 குற்றச்சாட்டுகளை முன்வைத்து கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் பதிவாகியுள்ளது.

குறித்த பிரேரணைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் கூட்டு எதிரணியினர் ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்